அப்பொழுதெல்லாம் எங்கள் ஊருக்கு ஒரு வளையல் வியாபாரி வருவார்.வாரம் ஒருமுறை என்று கணக்கு.ஒரு மர பெட்டியில் வண்ண வண்ண வளையல்கள் பிளாஸ்டிக் வளையல்,மண் வளையல்,கவரிங் வளையல் இன்னும் பலப்பல வகை வளையல்கள்.அவரை யாரும் ஒரு வியாபாரியாய்மட்டும் பார்ப்பதில்லை.விற்பவர் வாங்குபவர் உறவையும் தாண்டி ஒரு நட்பு இருந்தது.'இது மண் வளையல்மா..குழந்தைக்கு வேண்டாம்' என்று வியாபாரம் தாண்டி பேசுவார்.
வீணாய்போன எதையும் தலையில் கட்ட மாட்டார்கள்.நாளைக்கு முகத்தில் விழிக்கணுமே என்று உண்மைக்கு பயப்படுவார்கள்.மிளகாய்காரர் 'கொஞ்சம் பொறுங்க அடுத்த மாசம் புது சரக்கு வருது அப்ப வாங்கலாம் 'என்பார்.இன்று அப்படி யாரையாவது பார்க்க முடிகிறதா?எப்போது இவர்கள் மாறிப்போனார்கள்?
இன்று.. இன்றைய வியாபாரம் முடிந்தால் சரி,எவனோ எப்படியோ போகிறான் என்ற எண்ணமே உள்ளது.எதிலுமே வியாபார நோக்கமே பிரதான படுகிறது.வாங்கி வீட்டிற்கு வருவதற்குள் உதவாக்கரையாய் போகும் பொருட்கள்.சீனா பொருள் தரமில்லை என்று தெரிந்துமே வாங்கி புலம்பாமலா இருக்கிறோம்?போன வாரம் கூட ஆந்திராவில் சீனா போன் பேசிக்கொண்டிருக்கும் போதே வெடித்து ஒரு பெண் இறந்தது போனது தெரியாமலா இருக்கிறோம்?
வியாபாரி நம்மை தேடி வரும்போது விற்பதற்கு அவனுக்கு ஒரு ஞாயமான பயம் இருந்தது.சரியில்லை என்றால் அடுத்தமுறை போக முடியாது என்று பயந்தான்.ஆனால் இன்று நாம் ஷாப்பிங் மால்,டிபார்ட்மென்ட்டல்ஸ்டோர் என்று அவர்களை தேடி போகும்போது அந்த உண்மையான வியாபாரிக்கு இருந்த 'மன நேர்மை'காணாமல் போய் விடுகிறது.நாமே ஒரு கட்டத்தில் விலை அதிகமுள்ள பொருளே நல்ல பொருள் என்ற எண்ணமும் கொண்டு விடுகிறோமே?
இங்குதான் நல்ல வியாபாரி மன உளைச்சலுக்கு ஆளாகிறான்.ஒன்று வியாபார தொழிலை விட்டு விடுகிறான் அல்லது அவனும் கலப்படம் செய்ய தொடங்குகிறான்.இப்படி அவனை தூண்டுவது நாமல்லவா?இன்று குழந்தைக்கு கொடுக்கும் பால் பவுடரில் கூட கலப்படம்.லாபம்தான் நோக்கம்.லாபத்தில் திருப்தி இல்லாதவனாக இருக்கிறான் இன்றைய வியாபாரி.
இவர்கள் மாறினார்களா அல்லது நாம் தான் இவர்களை மாற்றினோமா?
''ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்''என்பதையும் ''தள்ளுபடி''என்பதையும் என்று நாம் நம்ப ஆரம்பித்தோமோ அன்று உண்மை வியாபாரி திகைத்து போகிறான்.இது எப்படி சாத்தியம்?ஒன்று வாங்கினால் மற்றொன்றை எப்படி இலவ மாக கொடுக்க முடியும் என்றும் முதல் போட்டுவாங்கி அதைஎப்படி தள்ளுபடி செய்து விற்க முடியும் என்றும் உண்மை வியாபாரி தலையை பிய்த்துகொள்கிறான்.இதை ஏன் யாருமே உணர மறுக்கிறார்கள் என்று வேதனைப்படுகிறான்.
உரித்த வெங்காயம் ,உரித்த பூண்டு,அரைத்த இட்லி மாவு என ஹை-டெக்காக இருக்கும் நமக்கு இதையெல்லாம் யோசிக்க நேரம் எங்கே இருக்கிறது?
''பத்துங்றத இருபதுன்னாலும் பரவால்ல எனக்கு உடனே வேணும் ''என்று வியாபாரிக்கே ஐடியா கொடுப்பவர்கள் அல்லவா நாம்?
இளமுருகன்
நைஜீரியா
06.02.2010 5.10 P.M.

12 comments:
உலக மயமாக்கல் என்ற காரணத்திற்காக நாம் கொடுத்த மிகப் பெரிய விலை இது.
ரஜினிய விட பாஸ்டா இருக்கீங்க ராகவன் சார்,பின்னூட்டம் போடறதுல...நன்றி
ம்... ரொம்பவும் யோசிக்கிறீர்கள்...
நன்றி மிஸ்டர் மாயன்
ம் நல்ல சிந்தனை
எல்லாமே யாவாரம்னு ஆயிடுச்சு. இதுல என்னத்த சொல்ல? நல்ல பதிவு.. வாழ்த்துக்கள்....
Thanks for your visit and comments---Mr.Pulikesi & Mr.Annamalaiyan.
அண்ணா எங்கயோ போய்டிங்க அருமை
நன்றி சிலம்பு
வீணாய்போன எதையும் தலையில் கட்ட மாட்டார்கள்.நாளைக்கு முகத்தில் விழிக்கணுமே என்று உண்மைக்கு பயப்படுவார்கள்.மிளகாய்காரர் 'கொஞ்சம் பொறுங்க அடுத்த மாசம் புது சரக்கு வருது அப்ப வாங்கலாம் 'என்பார்.இன்று அப்படி யாரையாவது பார்க்க முடிகிறதா?எப்போது இவர்கள் மாறிப்போனார்கள்?//
எல்லாம் மாறிப்போச்சுங்க!!
இந்த இடுகையை தமிலிஸ்ல் ''பிரபல இடுகையில்'' இடம்பெற ஓட்டு போட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி! நன்றி!! நன்றி!!!
correct.
Frozen idly யை விட்டுடீங்களே
virutcham
Post a Comment
ஏதாவது சொல்லிட்டுப் போங்க சார்...