சென்ற பிப்ரவரி 11 ம் தேதி நான் விடுமுறைக்கு இந்தியா செல்ல இருந்தேன்.அண்ணன் ராகவன் மற்றும் அணிமா (யோக்பால்) 'ஆன் தி வே' யில் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.நான் இணையத்திலும் அலைபேசியிலுமே அறிந்திருந்த இரு பெரும் தலைகளை(!) நேரில் சந்திக்க இருந்ததில் ஒர் உற்சாகம் + ஆர்வம் + எதிர்பார்ப்பு + பதற்றம்+பயம் (பெரும் தலைகள் ஆயிற்றே) எல்லாம் இருந்தது.
நான் கற்பனை செய்திருந்ததைவிட இளமையாகவே இருந்தார் ராகவன் அண்ணன்.மிக இயல்பாக, பழகிய சிறுது நேரத்திலேயே ஏதோ பத்தாண்டு பழக்கம் போல பேச ஆரம்பித்து விட்டார்.மதிய சாப்பாடு அவர் வீட்டில் தான்.அவருக்கு மேல் அவர் துணைவியார் அன்பாய் இருந்தார்.இருவரும் மாறி மாறி பரிமாறினார்கள்.நான் தனியன்.கூட பிறந்தவர்கள் கிடையாது .அந்த கணத்தில் ஒரு அண்ணன் இருந்திருந்தால்...இப்படிதான் இருக்குமோ என்று நினைத்து கொண்டேன்.
அடியேன்,அண்ணன் நைஜீரியா ராகவன் மற்றும் யோக்பால்
அவர் வீட்டு தோட்டம் பற்றி ப்ளாக்கிள் எழுதி இருந்ததை படித்திருந்ததால்
வெளியில் வந்து ஆர்வமாக பார்தேன்.வீடும் மிக்க நேர்த்தியாக வைத்திருந்தார்கள். .ராகவன் அண்ணன் என்னை வீட்டில் ஓய்வு எடுக்க சொல்லி விட்டு ஆபீஸ் போய் விட அவர் மகன் அரவிந்த் மற்றும் துணைவியாருடன் பேசிக்கொண்டிருந்தேன்.அர்விந்த்தின் பரந்துபட்ட அறிவில் மயங்கினேன்.மாலை நண்பர் யோக்பால் அவர் நண்பர் சோஜனுடன் வந்து சேர்ந்ததுமே உற்சாகம் தொற்றிக்கொண்டது.
நண்பர் சோஜன்
எங்கோ ஆரம்பித்த பேச்சு சினிமா ,அரசியல் என சென்றது.வேறு என்னதான் பேச இருக்கிறது?ஆனாலும் நண்பர் சோஜன் பேச்சில் ஆழம் இருந்தது.குறிப்பாக தெலுங்கானா பற்றிய அவருடைய பேச்சு சிந்திக்க வைத்தது.அண்ணன் நைஜீரியா ராகவன் ஆகட்டும் யோக்பால் ஆகட்டும் அடடா...நிறைய படிக்கிறார்கள் ! உலக நடப்பை உற்று கவனிக்கிறார்கள்.நான் அவர்களின் பேச்சை கவனித்து கொண்டு மயங்கி இருந்தேன் (ஐயய்யோ...நான் ஒன்னும் குடிக்கலீங்க!!!)
இரவு உணவு சாப்பிட்டு விட்டு ராகவன் சார் வீட்டிலிருந்து பிரிய மனமின்றி கிளம்பி நண்பர் யோக்பால் மற்றும் சோஜனுடன் கெஸ்ட் ஹவுஸ் சேர்ந்தேன்.
இரவு நெடு நேரம் இந்த புது உறவுகளை பற்றி சிந்தித்துக்கொண்டிருந்தேன்.அனைவரையும் தம் உறவுகள் போல் பேசும் ராகவன் அண்ணன் குடும்பம் ,தூக்கம் கெட்டு காலையில் எனக்காக ஏர்போர்ட் வரை வந்து வழி அனுப்பிய நண்பர் யோக்பால் ...இப்படி எத்தனை இனிமையான மனிதர்கள் ...இவர்களுக்கு நன்றியை தெரிவிப்பது எப்படி?வாழ்கை பயணத்தில் நிறைய பேரை சந்திக்கிறோம் ...சிலரே மனதில் நிற்கிறார்கள்.
அன்புடன்...
இளமுருகன்
நைஜீரியா
11.03.2010 8.40 a.m.

29 comments:
ஹ்மம்ம்ம்மம்ம்ம்ம். மகிழ்ச்சி அண்ணா உங்களது நட்பு தொடர எனது வாழ்த்துகள் ...
:)
எப்போ இந்திய விசிட்டை பற்றி எழுதப்போகிறீர்கள்.
கேபிள் சஙக்ர்
nice !!
வாழ்கை பயணத்தில் நிறைய பேரை சந்திக்கிறோம் ...சிலரே மனதில் நிற்கிறார்கள் thats true.
மகிழ்ச்சி எனது வாழ்த்துகள்
வந்துட்டோமில்ல...
தங்கள் வருகையால் மிக்க மகிழ்ச்சி அடைந்தோம்...
உங்களுக்காக எப்போதும் நம் வீட்டுக் கதவுகள் திறந்திருக்கும்..
// நான் கற்பனை செய்திருந்ததைவிட இளமையாகவே இருந்தார் ராகவன் அண்ணன் //
:)
thanks for sharing, nice to read and see.
// நான் கற்பனை செய்திருந்ததைவிட இளமையாகவே இருந்தார் ராகவன் அண்ணன் //
ஆஹா... எப்படிங்க இதெல்லாம்...
எல்லோருமே என்னை வயசானவனா கற்பனை செஞ்சு பார்க்கறீங்க.... இப்பத்தாங்க 23 முடிஞ்சு 22 ஆரம்பிச்சு இருக்கு..
nice sir!அண்ணன் பின்னூட்ட மன்னன் மட்டுமில்ல உணவூட்ட மன்னனும் கூட:)
தங்களின் ராகவன் சார் மற்றும் திரு யோக்பால்
இருவருடனான சந்திப்பை மிக அழகாக மற்றும்
நெகிழ்ச்சியாக வர்ணித்துள்ளீர்கள். அருமை.
இருவர்களின் புகைப்படங்களும் வெகு நேர்த்தி!
நன்று.
பயணம் எப்படி இருந்தது??
அனைவரும் சுகமா??
இந்திய பயண கட்டுரையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
ராகவன் அண்ணன் ரொம்ப இளமையா இருக்கிறாரே !!. எதிர்பார்த்ததைப் போலவே இருக்கிறார்.
அண்ணனுக்கு வணக்கம் சொல்லிடுங்க..
நாங்களும் வருவோம்ல !
பின்னூட்டமிட்ட அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.
அன்பின் இளமுருகன்
எங்க இராகவன் அண்ணன் நட்பின் இலக்கணம். அரவிந்துடன் பேசினால் பொழுது போவதே தெரியாது - அனைத்தைப் பற்றியும் பேசலாம்.
நல்வாழ்த்துகள்
மிக்க மகிழ்ச்சி; நண்பர் ராகவன் மெயில் மூலம் பழக்கம். புகை படங்கள் மூலம் அனைவரையும் பார்த்தது மகிழ்ச்சி
nice
hai,
Congrats for your Team, I request the Nigeria bloggers to give more information for Tamil Nadu about Nigeria working conditions, Safety, Security etc... Many of our people are afraid to work there is Nigeria so pls post more info that will be usefull for all of us...... Arun
:-))
இதுபோன்ற இனி ஒரு சந்திப்பு வரும்பொழுது மறக்காமல் எங்களுக்கும் தெரியப்படுத்தவும் . வந்துருவோம்ல 1
nice to see this write up, keep writing, best wishes
நன்றி ~ ருத்ரன் சார்
நன்றி ~ RDX அந்நியன்
நன்றி ~ ஜெய்லானி
நன்றி ~ ராஜேஷ்வரி
நன்றி ~ மோகன்குமார்
நன்றி ~ சீனா
மற்றும் அனைத்து நண்பர்களுக்கும்
இளமையாகவே இருந்தார் ராகவன் அண்ணன்//
காமடி பண்ணாதீங்கண்ணே.. ஹிஹி.
அது சரி..என்ன மெனு என்று சொல்லி இருக்கலாம். நைஜிரியா வந்து ஒரு வெட்டு வெட்டிட்டு வந்திருப்போம்ல...
"எங்கோ ஆரம்பித்த பேச்சு சினிமா ,அரசியல் என சென்றது.வேறு என்னதான் பேச "
இதை விட்ட வேற எதை பற்றி பேச நல்ல பதிவு
/////வாழ்கை பயணத்தில் நிறைய பேரை சந்திக்கிறோம் ...சிலரே மனதில் நிற்கிறார்கள்./////
உண்மைதான் நண்பரே!!
Post a Comment
ஏதாவது சொல்லிட்டுப் போங்க சார்...