வாங்க.. வாங்க... வாங்க....

Sunday, March 28, 2010

எர்த் அவர் (Earth Hour)

நேற்று எர்த் அவர்  (இரவு 8.30-9.30)அனுசரித்தீர்களா?நான் ஏதோ என்னால் முடிந்த மட்டும் என் அறையின் அனைத்து விளக்குகளையும் மின் விசிறி, எ.சி. போன்றவற்றை நிறுத்தி வைத்தேன். சில நண்பர்களுக்கும் சொன்னேன்.அந்த ஒரு மணி நேரத்தில் நான் தங்கி இருக்கும் காலணியை ஒரு ரவுண்டு வந்தேன்.வழக்கம் போல எங்குமே மின் விளக்குகள் எரிந்து கொண்டுதான் இருந்தன.இத்தனைக்கும் இங்குள்ள அனைவருமே எஞ்சினியர் லெவலில் இருப்பவர்கள்.யாருக்குமே இப்படி ''எர்த் அவர்'' என்று  ஒன்று அனுசரிப்பது பற்றிய அக்கறையே இருப்பதாய் தெரியவில்லை.தெரிந்திருந்தாலும் அது நமக்கல்ல யாருக்கோ என்பது போல கண்டுகொள்ளாமலும் இன்னும் 'ஆமாம் , இந்த ஒரு மணி நேரம் நிப்பாட்டிட்டா உலக வங்கி கடன அடச்சிரலாமா' என்று கிண்டலடித்துக் கொண்டும் இருந்தார்கள்.கண்டிப்பாக இந்த ஒரு மணி நேரம் நிப்பாட்டு வதால் மட்டும் ஒன்னும் ஆகிவிடாதுதான்.இது ஒரு குறியீடு,இதை வழக்கமாக கொண்டு தேவை இல்லாத போது தேவை இல்லாத மின் சாதனங்களை நிறுத்தி வைப்பதன் மூலம் வீட்டுக்கும் நாட்டுக்கும் நன்மை செய்தவராவோம்.

நேற்று லக்னோவில் எடுத்த கணக்கெடுப்பின் படி அந்த ஒரு மணி நேரத்தில் கிட்டத்தட்ட 500 மெகாவாட் மின்சாரம் மிச்சமாகி உள்ளது. சிறு துளிதான் பெரு வெள்ளம்.



தனி மனிதனிலிருந்துதான் எதுவுமே தொடங்க வேண்டும்.ஒரு தனி மனிதனுக்கு ஏற்படுவதுதான் நாளைக்கு சமுதாயத்திற்கும் ஏற்படும்.ஒரு தனி மனிதனுக்கு ஏற்படுவதை ஒவ்வொருவரும் தமக்கு ஏற்பட்டதாக எண்ணி குரல் கொடுக்க முன்வர வேண்டும்.ஏற்கனவே கூட்டு குடும்பம் சிதைந்து தனி குடும்பம் என தனி   தனி  தீவாக வாழும் நமக்கு சமுதாயத்தின் உதவி கண்டிப்பாக தேவை.ஆகவே நீங்கள் ஒருவருக்கு குரல் கொடுத்தால் தான் நாளை உங்களுக்கு ஒருவர் குரல் கொடுப்பார் என்பதை மறந்து விடாதீர்கள்.எனவே ''உங்கள் சுயநலத்திற்காகவாவது சமுதாய நலனை பேணுங்கள்''


எர்த் அவரில் என்ன செய்தாய் என்றேன் நண்பனிடம்
விளக்கணைத்தேன் என்று விளக்கமளித்தான்
அது தெரியும்
எர்த் அவரை எப்படி கழித்தாய் என்றேன்
விளக்கெண்ணெய் மாதிரி கேட்காதே
என்று விழி சொடிக்கினான்
மெல்ல புரிந்தது மேஜிக் -அவன்
'எர்த் அவர்'ஐ 'வொர்த் அவர்'  ஆக்கிக் கொண்டது.

அன்புடன்...
இளமுருகன்
நைஜீரியா
28.03.2010   7.40 p.m.

15 comments:

இராகவன் நைஜிரியா said...

// நேற்று எர்த் அவர் (இரவு 8.30-9.30)அனுசரித்தீர்களா? //

நைஜிரியாவில் ஒரு நாளைக்கு 20 மணி நேரம் இதைத்தானே செஞ்சுகிட்டு இருக்கோம் நண்பரே.

இராகவன் நைஜிரியா said...

// யாருக்குமே இப்படி ''எர்த் அவர்'' என்று ஒன்று அனுசரிப்பது பற்றிய அக்கறையே இருப்பதாய் தெரியவில்லை.//

உண்மையைச் சொல்ல வேண்டுமானால், இந்த இடுகைப் படிக்கும் வரை எனக்கு இது தெரியாதுங்க.

இராகவன் நைஜிரியா said...

// நேற்று லக்னோவில் எடுத்த கணக்கெடுப்பின் படி அந்த ஒரு மணி நேரத்தில் கிட்டத்தட்ட 500 மெகாவாட் மின்சாரம் மிச்சமாகி உள்ளது. சிறு துளிதான் பெரு வெள்ளம். //

சரியாகச் சொன்னீர்கள். சிறு துளி பெரு வெள்ளம்தான்.

இராகவன் நைஜிரியா said...

// எர்த் அவரை எப்படி கழித்தாய் என்றேன்
விளக்கெண்ணெய் மாதிரி கேட்காதே
என்று விழி சொடிக்கினான்
மெல்ல புரிந்தது மேஜிக் //

சூப்பரப்பு... ரொம்ப நல்ல நண்பர்.

நேசமித்ரன் said...

//எர்த் அவர்'ஐ 'வொர்த் அவர்' ஆக்கிக் கொண்டது.//

ரைட்டு... ;)

இருளில் ஒளி பெறும் பொழுதை வெளிச்சமாக எழுதி இருக்கிறீர்கள்

இளமுருகன் said...

நன்றி ~ ராகவன் சார்

நன்றி ~ கவிஞர் நேசமித்ரன் அவர்களே

Jaleela Kamal said...

ஆமாம் இது கண்டிப்பாக எல்லோரும் செயல் பட வேண்டிய ஒன்று , சிறு துளி தான் பெரு வெள்ளம், நாங்க ஓவ்வொரு வருடமும் இது போல் விளக்கனைப்பது உண்டு பதிவு தான் போட முடியாமல் போய் விட்டது போட்டு இருந்தால் சில பேராவது இதை கடைபிடித்து இருப்பார்கள்.

தினப்படி மின்சார சிக்கனத்தையும் கடைபிடிக்கலாம்

இளமுருகன் said...

மிக்க நன்றி ஜலீலா

பனித்துளி சங்கர் said...

{{{ஆகவே நீங்கள் ஒருவருக்கு குரல் கொடுத்தால் தான் நாளை உங்களுக்கு ஒருவர் குரல் கொடுப்பார் என்பதை மறந்து விடாதீர்கள்.எனவே ''உங்கள் சுயநலத்திற்காகவாவது சமுதாய நலனை பேணுங்கள்''}}}

அழுத்தமான ஆழமான வரிகள்!!!!

இன்னும் நிறய எழுதுங்கள்,,,,

இளமுருகன் said...

நன்றி 'பனித்துளி சங்கர்'

Anonymous said...

hahahha,
எர்த் அவரை எப்படி கழித்தாய் என்றேன்
விளக்கெண்ணெய் மாதிரி கேட்காதே
என்று விழி சொடிக்கினான்

super

sundaram

இளமுருகன் said...

வருக சுந்தர் , உனக்காகதான் வெயிட்டிங்
நிறைய படிப்பவன் நீ
நீயே சூப்பர் என்று சொன்னாய் என்றால்...
மகிழ்ச்சியோடு எற்றுகொள்கிறேன் நன்றி

மாயன் said...

:-)

Unknown said...

இதை படித்ததோடு இல்லாமல் தமிழிஷ்ல் ஓட்டும் போட்டு 'பிரபல இடுகை'க்கு உயர்த்திய அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றி! நன்றி!!

cheena (சீனா) said...

நல்லதொரு செயல் - எர்த் அவரைக் கடைப் பிடிக்க வேண்டும் - தமிழகத்தில் கடும் மிதடை இருக்கும் போது மின்சாரத்தினைச் சேமிப்பது நல்ல செயல்- நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Post a Comment

ஏதாவது சொல்லிட்டுப் போங்க சார்...

இன்றைய தலைப்பு செய்திகள்