கேரளாவில் இருந்து செருப்புக் கழிவுகளை தமிழகத்தின் கோவை மாவட்ட எல்லையில் கொண்டு வந்து லோடுலோடாக கொட்டி சுகாதாரக் கேட்டை ஏற்படுத்துகிறார்கள் என்று ஒரு செய்தி.
சிங்காரச் சென்னை என்றும் கூவத்தை சுத்தப்படுத்துகிறோம் என்றும் கோடி கோடியாய் ஒரு பக்கம் செலவழித்துக்கொண்டிருக்க கோவையில் இப்படி சந்தடி இல்லாமல் இரவில் கேரளா குப்பையை கொண்டு வந்து கொட்டிக்கொண்டிருக்கிறது.இதை இப்போதே தடுப்பதை விட்டுவிட்டு பின் இதற்கும் கோடிகளை செலவழிக்கப்போகிறோமா? இதையே வேறு மாநிலத்தில் போய் செய்ய துணிவிருக்குமா அல்லது நாம் இப்படி செய்தால் சும்மா விட்டு விடுவார்களா?
வந்தாரையெல்லாம் வாழவைத்துக்கொண்டிருக்கும் நமக்கு கிடைக்கும் பரிசுதான் இதுவா? யாரோ எப்படியோ போகட்டும் நாம் நன்றாய் இருந்தால் போதும் என்ற ஈன எண்ணம்தானே இது?
மலேசியா,சவூதி அரேபியா மற்றும் பார்சிலோனியா ஆகிய நாடுகளில் இருந்து பல டன் குப்பை மற்றும் நச்சுக் கழிவுகளை கப்பல் மூலம் ஏற்றி இந்தியாவில் வந்து கொட்டப்படுகிறது என்று மற்றொரு செய்தி.
இதன் முன்னணி பின்னணி எதுவாகவேனும் இருந்து விட்டு போகட்டும், முதலில் இவர்கள் இந்தியாவை ஏன் தேர்ந்தெடுக்கிறார்கள், இந்தியாவைப் பற்றி என்ன நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்? இந்தியா என்ன குப்பை கிடங்கா? இதெற்கெல்லாம் இடம் கொடுத்தது எது,யார்? சுற்றுச்சூழல்பாதுகாப்பு துறை என்ன செய்கிறது? இனிமேலேனும் இதை தடுக்க போகிறார்களா இல்லையா? நச்சு பொருள்களை இறக்குமதி செய்வானேன் பின் நோய் பரவி இறப்பவர்க்கு லட்சலட்சமாய் நிவாரணம் கொடுப்பானேன்?
ஐயா அரசியல்வாதிகளே, கொஞ்சமாவது வாங்கும் சம்பளத்திற்கு அல்லது லஞ்சத்திற்கு ஏதாவது நாட்டு மக்களுக்கு நல்லது செய்து அடுத்த ஜென்மத்திற்காவது புண்ணியம் தேடிக்கொள்ளுங்கள்.உங்களுக்கு ஓட்டு போட இந்த மக்கள் வேண்டும் அதற்காகவாவது இவர்களை காப்பற்றக்கூடாதா?
இளமுருகன்
நைஜீரியா. 24.04.20010 4.30 p.m.

7 comments:
நெஞ்சு பொறுக்குதில்லையே
அவசியமான இடுகை
இப்போதுள்ள அரசியல் வியாதிகள் பணம் சம்பாதிப்பதில் குறியாக இருப்பதால்... இந்தியாவைப் பற்றி அவர்களுக்கு கவலையில்லை
//நேசமித்ரன் said...
நெஞ்சு பொறுக்குதில்லையே
அவசியமான இடுகை //
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கவிஞரே!
//இராகவன் நைஜிரியா said...
இப்போதுள்ள அரசியல் வியாதிகள் பணம் சம்பாதிப்பதில் குறியாக இருப்பதால்... இந்தியாவைப் பற்றி அவர்களுக்கு கவலையில்லை //
உண்மைதான் சார்,விடிவு உண்டென்று நம்புவோம்
மிக மிக உபயோகமான பதிவு.. அரசியல்வாதிகள் இதை யோசிப்பார்களா?
Elamurugan,
why no blogs recent day, checking regurlay your site.
sundaram
அன்பின் இளமுருகன் - அரசின் கவனத்திற்கு இன்னும் வரவில்லையா - ம்ம்ம் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
Post a Comment
ஏதாவது சொல்லிட்டுப் போங்க சார்...