வாங்க.. வாங்க... வாங்க....

Saturday, April 24, 2010

நச்சு எண்ணம்

சமீபத்தில் தினசரிகளில் நான் படித்த இந்த செய்திகள் என்னை அதிர வைத்ததோடு வருத்தப்படவும் செய்தது.அதை உங்களோடு பகிரத்தான் இந்த பதிவு.


 கேரளாவில் இருந்து செருப்புக் கழிவுகளை தமிழகத்தின் கோவை மாவட்ட எல்லையில் கொண்டு வந்து லோடுலோடாக கொட்டி சுகாதாரக் கேட்டை ஏற்படுத்துகிறார்கள் என்று ஒரு செய்தி.

சிங்காரச் சென்னை என்றும் கூவத்தை சுத்தப்படுத்துகிறோம் என்றும்  கோடி கோடியாய் ஒரு பக்கம் செலவழித்துக்கொண்டிருக்க கோவையில் இப்படி சந்தடி இல்லாமல் இரவில் கேரளா குப்பையை கொண்டு வந்து கொட்டிக்கொண்டிருக்கிறது.இதை இப்போதே தடுப்பதை விட்டுவிட்டு பின் இதற்கும் கோடிகளை செலவழிக்கப்போகிறோமா? இதையே வேறு மாநிலத்தில் போய் செய்ய துணிவிருக்குமா அல்லது நாம் இப்படி செய்தால் சும்மா விட்டு விடுவார்களா?
வந்தாரையெல்லாம் வாழவைத்துக்கொண்டிருக்கும் நமக்கு கிடைக்கும் பரிசுதான் இதுவா? யாரோ எப்படியோ போகட்டும் நாம் நன்றாய் இருந்தால் போதும் என்ற ஈன எண்ணம்தானே இது?மலேசியா,சவூதி அரேபியா மற்றும் பார்சிலோனியா ஆகிய நாடுகளில் இருந்து பல டன் குப்பை மற்றும் நச்சுக் கழிவுகளை கப்பல் மூலம் ஏற்றி இந்தியாவில் வந்து கொட்டப்படுகிறது என்று மற்றொரு  செய்தி.

இதன்  முன்னணி பின்னணி எதுவாகவேனும் இருந்து விட்டு போகட்டும், முதலில் இவர்கள் இந்தியாவை ஏன் தேர்ந்தெடுக்கிறார்கள், இந்தியாவைப் பற்றி என்ன நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்? இந்தியா என்ன குப்பை கிடங்கா? இதெற்கெல்லாம் இடம் கொடுத்தது எது,யார்? சுற்றுச்சூழல்பாதுகாப்பு  துறை என்ன செய்கிறது? இனிமேலேனும் இதை தடுக்க போகிறார்களா இல்லையா? நச்சு பொருள்களை இறக்குமதி செய்வானேன் பின் நோய் பரவி இறப்பவர்க்கு லட்சலட்சமாய் நிவாரணம் கொடுப்பானேன்?

ஐயா அரசியல்வாதிகளே, கொஞ்சமாவது வாங்கும் சம்பளத்திற்கு அல்லது லஞ்சத்திற்கு ஏதாவது நாட்டு மக்களுக்கு நல்லது செய்து அடுத்த ஜென்மத்திற்காவது புண்ணியம் தேடிக்கொள்ளுங்கள்.உங்களுக்கு ஓட்டு போட இந்த மக்கள் வேண்டும் அதற்காகவாவது இவர்களை காப்பற்றக்கூடாதா?


இளமுருகன்
நைஜீரியா.  24.04.20010  4.30 p.m.

9 comments:

நேசமித்ரன் said...

நெஞ்சு பொறுக்குதில்லையே

அவசியமான இடுகை

இராகவன் நைஜிரியா said...

இப்போதுள்ள அரசியல் வியாதிகள் பணம் சம்பாதிப்பதில் குறியாக இருப்பதால்... இந்தியாவைப் பற்றி அவர்களுக்கு கவலையில்லை

இளமுருகன் said...

//நேசமித்ரன் said...

நெஞ்சு பொறுக்குதில்லையே

அவசியமான இடுகை //

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கவிஞரே!

இளமுருகன் said...

//இராகவன் நைஜிரியா said...

இப்போதுள்ள அரசியல் வியாதிகள் பணம் சம்பாதிப்பதில் குறியாக இருப்பதால்... இந்தியாவைப் பற்றி அவர்களுக்கு கவலையில்லை //

உண்மைதான் சார்,விடிவு உண்டென்று நம்புவோம்

கவிதை காதலன் said...

மிக மிக உபயோகமான பதிவு.. அரசியல்வாதிகள் இதை யோசிப்பார்களா?

Anonymous said...

Elamurugan,

why no blogs recent day, checking regurlay your site.

sundaram

ஈரோடு தங்கதுரை said...

நல்ல கருத்துக்கள், வாழ்த்துக்கள் . அப்புறம் , ஜெயா டிவி -ல் மக்கள் அரங்கம் நிகழ்ச்சியில் நான் பேசியதை ஒரு பதிவாக போட்டுள்ளேன் . அதையும் ஒரு நடை வந்து பார்த்துவிட்டு போங்கள். http://erodethangadurai.blogspot.com/

krishy said...

அருமையான பதிவு

தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்
இந்த தமிழ் புத்தாண்டில் உங்கள் பதிவுகளை தமிழ் போஸ்டில் இணைத்து பயன் பெறுங்கள்
தமிழ் போஸ்ட் செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்

http://tamil.dailylib.com

To get vote button
http://tamil.dailylib.com/static/tamilpost-vote-button/

உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் …

நன்றி
தமிழ் போஸ்ட்

cheena (சீனா) said...

அன்பின் இளமுருகன் - அரசின் கவனத்திற்கு இன்னும் வரவில்லையா - ம்ம்ம் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Post a Comment

ஏதாவது சொல்லிட்டுப் போங்க சார்...

இன்றைய தலைப்பு செய்திகள்