இனி விமர்சனம் :
படம் ஒரு பழத்தை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கிறது.'பழம்' பெறாத முருகனை சாந்தப்படுத்த சொல்லப்படும் கதையாக படம் நகர்த்தப்படுகிறது.அனைவருமே 'பழம்'பெரும் நடிகர்,நடிகைகள் என்பதால் நடிப்பில் பின்னி பெடல் எடுத்திருகிறார்கள்.சிவாஜி கணேசனை தவிர வேறு யாராவது இதில் நடித்திருந்தால்...சிவனுக்கு இவ்வளவு புகழ் வந்திருக்குமா என்பது சந்தேகமே.
தருமி-சிவன் 'கேள்வி-பதில்'காட்சியில் சிவாஜியையே நாகேஷ் தூக்கி சாப்பிட்டு விடுகிறார்.இந்த உண்மையான கோபத்தால் தான் பாண்டிய சபையில் நக்கீரரை 'அவன் இவன்'என சிவாஜி பேசி நக்கீரரை நெற்றிக்கண்ணால் 'கொலை'செய்து விடுகிறார்.
ஹேமநாத பாகவதரை பாடியே துரத்தி அடிப்பது (no fight) புது யுக்தி.படத்தில் பாடல்கள் சிறப்பாக அமைந்திருந்த போதும் ஒரு பாடல் கூட re-mix ஸ்டைலில் இல்லாமல் அனைத்து பாடல் வரிகளும் ஈஸி யாக புரிந்துபோவது ஒரு குறையாகத்தான் தெரிகிறது.
தாட்சாயணி கணவனை (சிவன்) எதிர்த்து பேசிவிட்டு வீட்டை விட்டு வெளியேறும் போது பாரதிராஜா கண்ட 'புதுமை பெண்ணாய்' மிளிர்கிறார்.இந்த சீன்களில் பெண்கள் பக்கம் விசிலும் கைதட்டலும் தூள்பறக்கிறது.
பழதிற்காக 'புசுக்' கென கோபம் கொள்ளும் முருகன் ஔவை பலமுறை 'நீ ஒரு பழம் அதுவும் ஞானப்பழம் ' என பாடும்போது 'யாரைப்பார்த்து பழம் என்கிறாய்'என முருகனுக்கு கோபம் வராதது லாஜிக் காக இடிக்கிறது.
இப்படி படத்தின் கருவான பழத்திற்கு இயக்குனர் முக்கியத்துவம் கொடுத்ததாக தெரியவில்லை.காட்சிகளில் ஒரு சிறிய பழமே காட்டப்படுகிறது.அதை ஞானப்பழம் என்பதை நம்பமுடியவில்லை.
இன்றைய நம் சட்டசபையில் பேசுவது போல மாமன்னர் பாண்டியன் அவையிலும் 'அவன் இவன்'என்ற ஏகவசனங்கள் இடம் பெற்றுதான் இருகின்றன.இந்த வரலாறு தெரிந்துதான் நம் MLAகள் இன்று சட்டசபையில்நடந்து கொள்கிறார்கள் என்ற கூடுதல் தகவலும் கிடைகிறது.
ஆக மொத்தம் அருமையான கைலாய செட் அமைப்புகள்,புரியும்படியான பாடல்கள்,மந்திர தந்திர காட்சிகள் என படம் குடும்பத்தோடு பார்க்கும் படியாகவே உள்ளது.
படம் முடிந்து வெளியே வரும்போது ''ஞானபழத்திற்கு கொட்டை உண்டாப்பா?''என்று என் மகன் கேட்ட கேள்விக்குத்தான் இன்றுவரை எனக்கு பதில் தெரியவில்லை.உங்களுக்கு...?
இளமுருகன்
நைஜீரியா
27.01.10 11.00 a.m.

11 comments:
நன்றி சிலம்பு.உன் கருத்தை நான் நீக்கவில்லை ஏதோ ப்ராப்ளம்.சாரி.
அட்டகாசம்
-நாதன்
ஆமா இதை எந்த தியேட்டர்ல பாத்தீங்க??
///''ஞானபழத்திற்கு கொட்டை உண்டாப்பா?''என்று என் மகன் கேட்ட கேள்விக்குத்தான் இன்றுவரை எனக்கு பதில் தெரியவில்லை.உங்களுக்கு.///
அது தெரிஞ்சா நான் ஏங்க நைஜீரியாவுல குப்பை கொட்ட போறேன்???
ஆமா கேக்கனும்ன்னு நினைச்சேன், எதுக்கு இம்மாம் பெரிய ஃபாண்ட்டு?? கொஞ்சம் குறைச்சா நல்லாயிருக்கும்...
இளமுருகன்,
இயக்குனர் AP நாகராஜனின் அற்புத படைப்பு. இன்றும் ஓளவையார் என்றால் நினைவுக்கு வருவது KBS தான். அந்த காலத்தில் அதிகம் சம்பாதித்த (ஒரே படத்தில் ) நடிகை அவர் தான்.
கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறை தும்பி காமம் செப்பாது கண்டது மொழியுமோ?
இந்த பாடல் அதை தொடர்ந்த வசனம்.... அட அட ...
சுத்த தமிழில் இனி ஒரு படம் பார்க்க முடியுமா.
மிக்க நன்று.
பாலா.
நசுண்டு சாக நினைத்து
கொஞ்சுண்டு மதுவருந்தி நான்
மஞ்சுனை நினைந்து
எஞ்சிய எலாம் அழித்து
காரணம் ஏதுவென நோக்கின்
மதிஈனம் என்றே
மாசற்றோர் கூறையில்
எனுள்ளம் வெம்புவதேன்
நானறியேன்!
காதலோ !!
இருக்கு மதுவே,
உனையன்றி யார்க்குண்டு
குணம் இதுவே!!!
பண்புடன் வாழ நினைக்கும் (ஆனால் இதுவரை முடியாது போன)
பாலமுருகன்
+234 708 999 6984 .
காதல்
பைத்தியம்
கிறுக்கு
மதிஈனம்
இயல்பு உணரான்
வெகுளி
அறிவிலி
இவற்றுள் வேறுபாடுண்டோ!!
அணிமா சார் ஃபாண்டை குறைச்சாச்சு
உங்கள் கருத்துக்கும் யோசனைக்கும் நன்றி.
வாங்க பாலா சார்...என்னாச்சு இன்னைக்கு?
.
.
.
நன்றி
Post a Comment
ஏதாவது சொல்லிட்டுப் போங்க சார்...