வாங்க.. வாங்க... வாங்க....

Saturday, January 23, 2010

இது புரியுதா பாருங்க!

நான் ஒன்றும் 'இலக்கிய பேரொளி'இல்லை என்றாலும் ஏதோ அதில் ஒரு ஒட்டு உறவு இருக்கிறது.முதலில் லா.ச.ராமாமிர்தம் படித்தபோது சில ஏன் பல இடங்கள் புரிவது போலவும் புரியாதது போலவும் இருந்த போது நமக்குதான் 'ஞானம்'போதவில்லை என்று தேற்றிக்கொண்டேன்.அதையாரிடமும் சொல்லிகொள்ளவில்லை.'புரியவில்லை'என்றால் நம் கொஞ்ச 'அறிவும்'சந்தேகத்திற்கு இடமாகிவிடுமே!பின்னாளில் பலர் இப்படி 'அவர் புரியாத'புதிராக எழுத கூடியவர்தான் என்று ஓபனாக சொன்னதும் 'எனக்கும்'என்று என்னையும் இணைத்துக்கொண்டேன்.இப்படி எப்போதுமே நமக்கு யாராவது எடுத்துகொடுக்க ஆள் தேவைப்படுகிறது.

பின் நாட்களில் ஜெயகாந்தன்,பாலகுமாரன்,அசோகமித்திரன்,பிரபஞ்சன் எல்லாம் படித்தபோது சில இடங்கள் நின்று படிக்க வேண்டி இருந்தது.மனம்,புத்தி என்றதும் உடனே புரியாதது 'குடிக்கிறது தப்புன்னு புத்திக்கு தெரியுது ஆனால் மனசு கேட்க மாட்டேங்குதே'என்றதும் உடனே புரிந்தது.பிறகு கோணங்கி படிக்க நேர்கையில் மீண்டும் என்மீது சந்தேகம் வந்து விட்டது.சாரு நிவேதிதாவின் 'ஜீரோ டிகிரி'படிக்கையில் அது ஒரு செக்ஸ் புக் என்றே முதலில் நினைத்தேன்.முன்னுரையே மிரட்டி எடுத்து விட்டது.கடைசிவரை என்ன சொல்ல வருகிறார் என என் அறிவுக்கு புரியவில்லை.

இப்படிதான் மாடர்ன் ஆர்ட்டும்,எனக்கு இன்றுவரை புரியாத ஒன்று.ஒரு வேளை நம் 'மசால்'அவ்வளவுதான் என நினைத்து கொண்டாலும் அதில் ''ஏதோ''இருக்கத்தான் செய்யும் என்று நம்புகிறேன்.ஒருமுறை இசைமேதை எஸ்.ராஜம் சொன்னது போல ''அவங்க யோசிச்சு படம் போடுறாங்களா இல்ல படத்தபோட்டுட்டு அதுக்கு விளக்கம் யோசிப்பாங்களான்னு'' ஒரு சந்தேகம் உண்டு.

அவார்ட் வாங்குற படம்கூட 'புரியாத' படம்தான்.ஒரு வேளை எல்லோர்க்கும் புரிந்து போய் இருந்தால் அவார்ட் கூட கிடைச்சி இருக்காதோ?.கூட்டத்துல கூட புரியாம பேசுனா ஏதோ டீப்பா பேசுறதாஒரு நினைப்பு வந்து விடுகிறது.நம்மள விட அறிவாளின்னு மனசு நினைத்துகொள்கிறது.

சில கவிதைகள் கூட இப்படி தான் புரிய மாட்டேன்கிறது.இத்தனைக்கும் அதுவும் என் தாய் மொழி தமிழில் தான் எழுதப்பட்டிருகிறது.ஒருவேளை கவிதை எழுதும் போது கற்பனை அளவுக்கு மீறி மொழி தாண்டி போய் விடுகிறதோ?

நண்பர்களே...இதில் குறை எங்கே இருக்கிறது?என் அனுபவ பற்றாக்குறையா அல்லது 'புரியாத' அந்த ஒன்றுக்கு ஏதாவது ஸ்பெஷல் அறிவை வளர்த்துகொள்ளதாதா?இந்த அனுபவம் உங்களில் யாருக்காவது ஏற்பட்டிருக்கிறதா,அப்படி இருந்து அதில் இருந்து மீண்டிருந்தால் அந்த உக்தியை பகிர்ந்து கொள்வீர்களா?

இப்படிக்கு
புரிந்தும் புரியாத புரிந்ததுபோல புரிந்துகொள்ளும்
இளமுருகன்.

16 comments:

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

இளமுருகன் சார்..
பதிவை படிச்சதும் எனக்கு தோணினது என்னான......
.
.
.
.
கொஞ்சம் பொறுமையயிருங்க..
.
.
.
.
.
" புரிந்தும் புரியாத புரிந்ததுபோல புரிந்துகொள்ளும்
இளமுருகன். " அவர்களுக்கு இந்த வருட தமிழக அவார்ட் நிச்சயம்..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

//settings -> comments--> word verification க்கு no குடுங்க... ஒவ்வொரு முர கமெண்ட் குடுக்குறப்பயும் டார்ச்சர் பண்ணுது :-)//

சரி பண்ணீடிங்க போல..
நன்றி சார்..

http://urupudaathathu.blogspot.com/ said...

என்னாத்த சொல்றது??
சொல்ரதுக்கு ஒன்னிம்மில்ல!!!!!

இராகவன் நைஜிரியா said...

புரிந்தது... புரியாதது... அறிந்தது... அறியாதது...

இப்படி உலகத்திலே நிறைய இருக்கு..

புரிஞ்சதெல்லாம் புரியாம போகும்... புரியாததெல்லாம் புரியும்... என்ன சொல்ல வரேன்னு எனக்கே புரியலை.. பார்க்கலாம் அப்பாலிக்கா புரியுதான்னு..

இராகவன் நைஜிரியா said...

// அணிமா சொன்னது…
என்னாத்த சொல்றது??
சொல்ரதுக்கு ஒன்னிம்மில்ல!!!!!//

இப்படி சொன்னா எப்படி... ஏதாவது சொல்லிட்டுப் போங்க சார் அப்படின்னு சொல்லியிருக்கார் இல்ல..

ஏதாவது.... அப்படின்னு சொல்லணும்.

இராகவன் நைஜிரியா said...

// நான் ஒன்றும் 'இலக்கிய பேரொளி'இல்லை //

அப்ப நீங்க எதில் பேராளி..!!!

// என்றாலும் ஏதோ அதில் ஒரு ஒட்டு உறவு இருக்கிறது. //

ஹை... நல்ல ஒட்டு... உறவு வச்சு இருக்கீங்க போலிருக்கு... ஓட்டு கிடைக்கிற அளவுக்கு உறவு உண்டுங்களா?

இராகவன் நைஜிரியா said...

// முதலில் லா.ச.ராமாமிர்தம் படித்தபோது சில ஏன் பல இடங்கள் புரிவது போலவும் புரியாதது போலவும் இருந்த போது நமக்குதான் 'ஞானம்'போதவில்லை என்று தேற்றிக்கொண்டேன். //

நீங்க ரொம்ப பெரிய ஆளுங்க அண்ணே... சில.. பல இடங்கள் உங்களுக்கு புரிஞ்சு இருக்கே அதுவே பெரிய விஷயம்...

கொடுத்து வச்சவர் பல இடங்கள் புரிஞ்சு இருக்கே..

இராகவன் நைஜிரியா said...

// அதையாரிடமும் சொல்லிகொள்ளவில்லை. //

ஏன் கேட்க மாட்டேன் என்று சொல்லிவிட்டார்களா?

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

சார்.. Template , பழையபடி
மாத்துங்க சார்.. Scroll பண்ணி ,Scroll பண்ணி

"புரிஞ்சதெல்லாம் புரியாம போகும்... புரியாததெல்லாம் புரியும்... என்ன சொல்ல வரேன்னு எனக்கே புரியலை.. பார்க்கலாம் அப்பாலிக்கா புரியுதான்னு.."

சரி உடுங்க.. எனக்கு என்னமோ ஆயிடுச்சு..
பதிவ மேல போட்டு , Ad சைட்-லயோ
இல்ல கிழேயோ போடுங்க..

நேசமித்ரன் said...

ஏதாவது....

சொல்லிட்டேன் சார்

நேசமித்ரன் said...

அறிவிக்கபடாத யாவும் மறை பொருள்
மறை பொருள் என்றால் மறைந்தது அல்ல
புரிந்தது கொகி ஸ்டேட் லகோஜா
இளா விருத்தாசலம்

புரியாதது
அது என்ன எதாவது வாங்க வாங்க
வாங்க என்றால் என்ன வாங்க ?
எண்ணம் வாங்கவா ?

நேசமித்ரன் said...

புரிகிறதா

புரி...

புரி என்பது இடம்
புரிதல் என்பதும்
அறிக என்பதும்
கேட்பது எது இளா

வாங்க வாங்க












:)

மாயன் said...

இளமுருகன்... சூப்பரா புலம்பியிருக்கீங்க... என்னோட புலம்பலை படிங்க...
.. அப்படியே இதையும் படிச்சு பாருங்க...

Punnakku Moottai said...

இளமுருகு,

என்னத்த சொல்லறது. உங்களுக்காவது பரவாஇல்லை புஸ்தகம்மட்டுந்தன் அப்பிடி இருக்கு. எனக்கு வாழ்க்கைலே பல விஷயம் புருஞ்சும் புரியாமதான் இருக்கு.

சமயத்திலே ரொம்ப நொந்துதான் போறேன். என்ன செய்ய.

வரவுக்கும் செலவுக்கும் எட்டல ன்னு வெளிய வந்து வேலை செஞ்சா, செலவு ஏறிகிட்டே தான் போகுது. மிச்சம் பிடிக்க முடியலே. இதுல வரவு செலவு புரிய மாட்டேங்குது.

ஊருலே இருக்கும் போது சம்பளம் கம்மின்னு, பத்தாதுன்னு சொல்லி பொண்டாட்டி திட்டுறான்னு வெளிநாடு வந்து அதிகம் சம்பாதிச்சாலும், "என்னை விட்டுட்டு பொய் எவளவு சம்பாதித்தாலும் சந்தோஷமில்ல". சொல்லற அவளோட மனசு புருஞ்சும் புரிய மாட்டேங்குது.

சரி தூக்கம் வரலேன்னு 2 ரவுண்டு போட்டா, போதை ஏறமாட்டேங்குது. சரின்னு பிராண்டு மாறி அதிகமா சரக்கு ஏறக்கனாலும், ஒன்னும் வேலைக்கு அவலே, இங்க போதை புரிஞ்சாலும் புரிய மாட்டேங்குது.

சரி காலையில் வேலைக்கு போய் பாஸ்கிடே நல்ல பேரு வாங்கலமுன்னாலும் , அந்த ஆளு mood புரிஞ்சாலும் புரிய மாட்டேங்குது.

எதபத்தி என்ன சொல்ல, வாழ்கையே புரியாமதான் நான் இதுவரைக்கும் ஓட்டிகிட்டு வரேன். போறவரை போகட்டும் . பார்க்கலாம்.

இப்படிக்கு,

பாலா,
+234 708 999 69 84

Punnakku Moottai said...

இளமுருகு,

நான் பொண்ணு எடுத்தது விருத்தாசலம் பக்கம் 'முதனை ' கிராமம். எனக்கு சொந்த ஊரு நெய்வேலி. நம்ப ஊருக்கு பக்கத்துக்கு ஊரு ஆயிடிங்க. அதனால ஒட்டு போட்டுட்டேன்.

இப்படிக்கு,

பாலா,
+234 708 999 69 84

sundaram selvarayar said...

இளமுருகன் வலைத்தளம் மிக அற்புதமான ஒருவரின் கைகளுக்கு வாய்த்திருக்கிறது, மிக அழகாகவும் அற்புதமாகவும் ஆழமாகவும் பேசவும் எழுதவும் கூடிய உங்களிடம் இருந்து நிறைய படிக்க ஆவலாக உள்ளேன்.

Post a Comment

ஏதாவது சொல்லிட்டுப் போங்க சார்...

இன்றைய தலைப்பு செய்திகள்