ஒருவர் கேட்டார் -எதற்காக இத்தனை கஷ்டப்படுகிராய்?
நான் கேட்டேன்-கஷ்டபடாமல் எப்படி வாழ்கையை ஓட்ட முடியும்?
அவர் சிரித்தபடி சொன்னார்-என்னை பார்
ஒரு ரூபாய்க்கு அரிசி வாங்கி உண்டு விட்டு உறங்கி விடுவேன்
போரடித்தால் வண்ணதொலைகாட்சியில் திரைப்படம் பார்த்திடுவேன்,
உழைக்காமல் நோய் வந்தால் மருத்துவரிடம் ஓடிடுவேன்
உயர் சிகிச்சை பெற்றிடுவேன் ராஜ மரியாதையுடன் !
உழைக்காமல் எப்படி அப்பா இத்தனையும் முடியும்?
முதலாமவர் சிரித்தபடி கேட்டார் -நான் யார் தெரியுமா?
தமிழ் நாட்டு குடிமகன்
என் நாட்டில் உணவுக்கு அரிசி ஒரு ரூபாய்
சமைப்பதற்கு கேசும் அடுப்பும் இலவசம்
பொழுதுபோக்கிற்கு வண்ண தொலைக்காட்சி மின்சாரத்துடன் இலவசம்
குடும்பத்துடன் உயிர்காக்கும் உயர் சிகிச்சையும் இலவசம்
எதற்காக உழைக்க வேண்டும் ?
நான் கேட்டேன் -உன் எதிர்கால சந்ததியின் நிலை என்ன?
பலமாக சிரித்தபடி உரைத்தார்
மனைவி பிள்ளை பெற்றால் ரூபாய் 5000 இலவசம் சிகிச்சையுடன்
குழந்தைக்கு சத்துணவு இலவசம் பாலர் பள்ளியில்
படிப்பு சீருடையுடன் மதிய உணவும் இலவசம் முட்டையுடன்
பாடப்புத்தகம் இலவசம் ,படிப்பும் இலவசம் ,பள்ளி செல்ல பஸ் பாஸும் இலவசம்
தேவை என்றால் சைக்கிளும் இலவசம்
பெண் பருவமடைந்தால் திருமண உதவித்தொகை ருபாய் 25000 இலவசம் ஒரு பவுன் தாலியுடன் திருமண செலவும் இலவசம்
தேவை என்றால் மாப்பிள்ளையுடன் பேப்பரில் விளம்பரமும் இலவசம்
மகள் பிள்ளை பெற்றால் மீண்டும் அதே கதை தொடரும் அவள் வாழ்கையிலும்
நான் எதற்கு உழைக்க வேண்டும் !?
வியந்து போனேன் நான் !!!
(நண்பர் மெயில்லில் அனுப்பிய செய்தி இது,அவருக்கு நன்றி)
இளமுருகன்
நைஜீரியா
29.01.10 5.53 a. m.

14 comments:
ஒரு குடும்ப நலனுக்காக,தமிழ்நாடு முற்றிலும் சீரழிக்க படுகிறது ..
உண்மைதான்,வருகைக்கு நன்றி சார்
வித்தியாசமான கோனத்தில் தமிழ்நாட்டை பற்றிய
ஆராய்ச்சி.
படிக்கும் போது சிரிப்பை வரவழைத்தாலும், கொடுமையானது இது.... வாழ்க்கையில் எதுவுமே இலவசம் கிடையாது...
:-(
இளமுருகன் இதுதான் இன்றைய தமிழகத்தின் நிலை, இதன் உண்மை நிலையை அறியும் போது வெள்ளம் தலையை மீறி சென்று இருக்கும், இது தமிழர்களின் சாபக்கேடு.
நன்றி ~ சுந்தரம்
நன்றி ~ அணிமா சார்
நன்றி ~ ராகவன் சார்
நன்றி ~ விண்மணி சார்
yes i hv also recd the forwar msg. nice know.
regards
www.hayyram.blogspot.com
சார், நாங்களே வயத்தெரிச்சலில் உள்ளோம். நமது பணத்தை எடுத்து நமக்கே கொடுக்கின்றார்கள். மக்களை முழு சோம்பியாக்குகின்றார்கள்...என்னமோ போங்க..விரைவில் உங்கள் கட்டுரைபோல் இதுவும் நடக்கும்.வாழ்க வளமுடன்,வேலன்.
நீங்களும் நைஜீரியாவா??? ஓரு ராகவன் சாரையே சமாளிக்க முடில... :)
//ஒரு குடும்ப நலனுக்காக,தமிழ்நாடு முற்றிலும் சீரழிக்க படுகிறது //
கண்ணாபின்னான்னு ரிப்பீட்டு அடிக்கிறேனுங்கோ...
அந்த குரங்கு பேப்பர் படிக்கிறது போட்டோ சூப்பர்....:)
உண்மைதான்
:(
ம்ம்.. எல்லாம் நூற்றுக்கும் இருநூற்றுக்கும் வாக்களித்த மக்கள், இரண்டாயிரம் ரூபாய் வண்ணத்தொலைக்காட்சிக்கு வாக்களிக்க மாட்டார்களா என்ற நினைப்பு தான்...
romba kodumai sar.
Post a Comment
ஏதாவது சொல்லிட்டுப் போங்க சார்...