வாங்க.. வாங்க... வாங்க....

Monday, January 25, 2010

பிச்சை ராமாயணம்

  1. பிறக்கும் போதே யாராவது 'பிச்சைக்காரன்'என்று பிறப்பதுண்டா?அப்படி பிறக்க யாருக்காவது விருப்பம்தான் இருக்குமா?அப்படி இருக்க பிச்சை எடுக்க நேர்வது எப்படி?பொறுப்பற்ற பெற்றோர்களா அல்லது பெற்றோர் யாரென்று தெரியாமல் பிறப்பதாலா?
  2. நாம் கோபத்தில் 'பிச்சை எடுத்தாவது பிழைத்துக் கொள்வேன்'என்று சொல்கிறோம் ,அது அவ்வளவு எளிதென்றா நினைக்கிறீர்கள்?
  3. பிச்சை எடுக்க நேர்ந்த அந்த முதல் நாள்,அந்த முதல் பிச்சையின் அவமானம் ஏற்படுத்திய வடு வாழ்நாளில் மறக்ககூடியதா?
  4. உங்கள் வாழ்நாளில் என்றாவது ஒருநாள் அல்லது ஒரு வேளை உணவாவது பிச்சை எடுத்து சாப்பிட்டு  இருக்கிறீர்களா?
  5. முதல் சம்பளம் வாங்கிய நாள்,திருமண நாள்,பிறந்த நாள் போல பிச்சை எடுத்த முதல் நாளும் மறக்க முடியாததாய் தானே இருக்கும்?
  6. பிறருக்கு உரியதை தெரியாமல் திருடுவதை காட்டிலும் பிச்சை கேட்பது உயர்ந்ததாக தெரிய வில்லையா?
  7. நீங்கள் சாப்பாட்டில் கை வைக்கும் போது சற்று முன் 'ஐயா சாப்பிட்டு ரெண்டு நாள் ஆச்சு ஏதாவது தருமம் பண்ணுங்க 'என்ற குரல் ஞாபகத்தில் வந்ததுண்டா?
  8. எந்த பாத்திர கடையிலாவது பிச்சைப்பாத்திரம் என்று விற்கிறார்களா?
  9. ஐஸ் கிரீம் ,பொம்மை,ஒயிட் யூனிபார்ம் என பிச்சை எடுக்கும் குழந்தைக்கும் கனவாய் போன ஆசைகள் இருக்கும் தானே?
     10.பிச்சைகாரர்களிடமிருந்தே திருடுபவர்களை பற்றி என்ன நினைகிறீர்கள்?

இளமுருகன்
நைஜீரியா
25.01.10  5.20 p.m.
        

7 comments:

Punnakku Moottai said...

இளமுருகன்,

உங்கள் கேள்விகளுக்கு பதில்கள்.

1 . குழந்தைகளை திருடி பிச்சை எடுக்க வைக்கும் கூட்டம் பற்றி. யாருடைய தவறு.
2 . குறைந்த முதலீட்டில், ஊனம் இல்லாத உறுப்பை ஊனமாக காட்டிக்கொண்டு சுலபமாக பிச்சை எடுப்பதில் என்ன பெரிய கஷ்டம்.
3 . அவமானமாக நினைத்தால் ஏன் பிச்சை?
4 . தன்மானம், முயற்சி, பிடிவாதம் உள்ளவன் செய்யமாட்டான்.
5 . எடுப்பவனை தான் கேட்கவேண்டும். ( சமயத்தில் கடன் கேட்கும்போது கேவலமாய் நினைத்ததுண்டு)
6 . Pirated மென்பொருள், திருட்டு VCD பார்க்கும் போது அவ்வுணர்வு ஏற்பட்டதில்லை. கண்டிப்பாக தமிழ் திருட்டு VCD பார்க்கும்போது இல்லை. அவர்கள் என்ன முறையான வரி கட்டுகிறார்களா? இல்லையே.
7 . சமயத்தில் உண்டு.
8 . திருவோடு விற்கப்படுகின்றது. வேண்டுமா?
9 . கண்டிப்பாக இருக்கும். நீங்கள் வாங்கி கொடுத்ததுண்டா?
10 . பிச்சைகாரர்களை வைத்து பெரும் பிஸ்னஸே நடக்குது.

பண்புடன் வாழ நினைக்கும் (ஆனால் முடியவில்லை)

பாலமுருகன்
+234 708 999 6984 .

இராகவன் நைஜிரியா said...

நல்ல கேள்விகள்.

பால முருகன் சரியான பதிலை சொல்லியிருக்கார்.

அதனால பால முருகன் பதிலுக்கு ஒரு டபுள் ரிப்பீட்டேய்

இளமுருகன் said...

பாலா சார்,என் கேள்விகளை விட உங்கள் பதில்கள்தான் டாப்.
வரவேற்கிறேன்.நன்றி.

இளமுருகன் said...

வாங்க ராகவன் சார்,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

கோவி.கண்ணன் said...

மருமகன் மாமனாரிடம் இருந்து பறிப்பதெல்லாம் பிச்சையில் வராதா ?

இராகவன் நைஜிரியா said...

// கோவி.கண்ணன் சொன்னது…
மருமகன் மாமனாரிடம் இருந்து பறிப்பதெல்லாம் பிச்சையில் வராதா ? //

அண்ணே அது கொள்ளையில் சேரும் இல்லாட்டி அதிகார பிச்சை என்று வேண்டுமானால் சொல்லலாம்

இளமுருகன் said...

அனைவரின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Post a Comment

ஏதாவது சொல்லிட்டுப் போங்க சார்...

இன்றைய தலைப்பு செய்திகள்